வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 24 மே 2020 (08:09 IST)

3 நாளைக்கு போர் பண்ண மாட்டோம்; ரம்ஜான் கொண்டாடனும்! – போரை நிறுத்திய தலீபான்கள்!

உலகம் முழுவதும் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப்பட இருப்பதால் தற்காலிகமாக போரை நிறுத்தி கொள்வதாக தலீபான் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த பல ஆண்டுகளாக தலீபான்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இதில் சில சமயங்களில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படும் சம்பவங்களும் நடந்தேறியுள்ளது. 2010 முதல் ஆப்கானிஸ்தான் அரசு கொண்டு வந்த சமாதான நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதிகளுடனான போரை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகிறது.

தற்போது உலகம் முழுவதும் இஸ்லாமியர்களின் பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப்பட இருக்கிறது. ரம்ஜானை முன்னிட்டு போர் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க ஆப்கானிஸ்தான் தலீபான் அமைப்பு முடிவெடுத்துள்ளது, இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள செய்தியில், ரமலானை நாட்டு மக்கள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட வேண்டும் என்பதற்காக மூன்று நாட்களுக்கு போர் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாகவும், இந்த மூன்று நாட்களுக்கு எதிரிகள் எந்த பகுதியிலும் தாக்குதல் நடத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.