1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 22 மே 2020 (18:51 IST)

உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழுத்தலைவராக ஹர்ஷவர்தன்தேர்வு

மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழுத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 34 பேர் கொண்ட குழுவுக்கு ஹர்ஷவர்தன் தலைமை தாங்குவார்  எனவும்,  வருடத்துக்கு 2 முறை கூடி, உலக சுகாதாரம் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும் 3 ஆண்டு காலம் பதவியில் நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும், இந்த குழு  உலக சுகாதார நிறுவனத்தின் செயல்திட்டங்களுக்கு பரிந்துரை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்  WHO நிர்வாக குழு தலைவராக காணொலி காட்சி மூலம் பதவியேற்றார்  என்பது குறிப்பிடத்தக்கது.