1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva

ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றம்: அதிபர் தப்பியோட்டம்!

ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றம்: அதிபர் தப்பியோட்டம்!
ஆப்கானிஸ்தான் நாடு முழுவதும் கிட்டத்தட்ட தாலிபான்களின் கட்டுப்பாட்டிற்கு வந்த நிலையில் அந்நாட்டு அதிபராக இருந்த அர்ஷப் கானி என்பவர் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
அதிபராக இருந்த அஷ்ரப் கானி தஜகிஸ்தான் நாட்டிற்கு சென்று விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் இந்தியாவிற்கு தப்பி வந்து உள்ள முன்னாள் ஆப்கானிய அமைச்சர் ஒருவர் ஆப்கன் அதிபராக இருந்த அஷ்ரப் கானியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார் 
 
இந்தநிலையில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் கொள்ளைகள் மற்றும் குழப்பங்களை தடுக்கவே ஆக்கிரமிப்பு செய்தோம் என்றும் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் தாலிபான் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகை கைப்பற்றப்பட்டதாகவும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தாலிபான் படைவீரர்களுக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது