1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (12:01 IST)

காபூல் மட்டும்தான் பாக்கி; தலீபான்கள் வசமான ஆப்கானிஸ்தான்!

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் பல இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில் விரைவில் காபூலை கைப்பற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்ட நிலையில் தலீபான்களிம் கை ஓங்கியுள்ளது. ஒவ்வொரு மாகாணமாக தாக்குதல் நடத்தி வந்த தாலீபான்கள் கிட்டத்தட்ட நாட்டின் பெரும்பான்மை பகுதிகளை கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மீது விரைவில் தலீபான்கள் படையெடுப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அவ்வாறு நடந்தால் ஆப்கன் ராணுவத்திற்கும், தலீபான்களுக்கும் பெரும் மோதல் ஏற்படும் என கூறப்படுகிறது.