வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 20 மார்ச் 2018 (20:05 IST)

சிரியா அதிபரின் சர்ச்சையை கிளப்பும் வீடியோ...

சிரியாவில் அரசுக்கு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதனால் பல அப்பாவி மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். 
 
சிரிய அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய விமானப்படை சிரியாவில் முகாமிட்டு போரில் ஈடுபட்டு வருகிறது. இதன்காரணமாக அண்மைக் காலமாக ஆசாத்தின் கை ஓங்கி வருகிறது. சுமார் 70 சதவீத பகுதி அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. 
 
இந்நிலையில், கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கவுட்டா பகுதிகளில் அதிபர் ஆசாத் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும், கவுட்டா நகரத்தை சிரிய அதிபர் பாஷார் அல் ஆசாத் பார்வையிட்டார். 
 
இது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், தீவிரவாதிகளால் நாட்டில் நிலவும் உள்நாட்டுப் போர் காரணமாக வீரர்கள் ஏதோ சூழலில் கட்டாயப்படுத்தப்பட்டு இருப்பது ஒருவித வலிதான். உங்களது ஒவ்வொரு தோட்டாக்களும் எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்கிறார்.
 
தாக்குதலின் காரணமாக மக்கள் அவதிப்பட்டிருக்கும் நிலையில், தாக்குதலை மேலும் உக்கப்படுத்துவது போல அதிபர் பேசியிருப்பது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.