செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 11 நவம்பர் 2019 (09:33 IST)

தொடரும் குண்டுவெடிப்புகள் – சிரியாவில் 8 பேர் பலி

சிரியாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த உள்நாட்டு போர் முடிவை எட்டி வருகிறது. இந்நிலையில் துருக்கியின் ஆதிக்கத்தில் உள்ள சிரியாவின் வடகிழக்கு பிராந்தியத்தின் துலுக் பகுதியில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்துள்ளது. காருக்குள் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. கடந்தவாரம் சிரியா – துருக்கி எல்லையில் குண்டு வெடித்ததில் 14 பேர் உயிரிழந்த சோகம் மறைவதற்குள் மற்றொரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்திருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.