புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 9 நவம்பர் 2019 (09:54 IST)

ஒரு நண்டு 33 லட்சமா? ஜப்பானில் ஆச்சர்யம்!

ஜப்பானில் நண்டு ஒன்று 33 லட்சத்துக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பனிக்காலங்களில் ஜப்பானியர்களின் விருப்ப உணவாக இருப்பது நண்டுகள்தான். இதனால் பனிக்காலங்களில் ஜப்பான் முழுவதும் நண்டு விற்பனை அதிகமாக இருக்கும். கடலில் பிடிபடும் நண்டுகளை உடனடியாக வாங்கி செல்ல மக்கள் கூட்டம் அலைமோதும்.

இந்நிலையில் ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள ஹோன்சூ தீவில் பிடிக்கப்பட்ட நண்டுகள் ஏலத்தில் விடப்பட்டன. அப்போது 1.2 கிலோ எடை கொண்ட நண்டு ஒன்று 46 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு விற்பனையானது. இந்திய மதிப்பில் இந்த நண்டின் விலை 33 லட்சம்.

கடந்த ஆண்டு அதிக விலைக்கு விற்பனையான நண்டின் சாதனையை இந்த நண்டு முறியடித்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் இந்த நண்டை கின்னஸ் புத்தகத்தில் பதியவும் முயற்சித்து வருகின்றனர்.