ஞாயிறு, 24 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (08:21 IST)

ஸ்வீடனில் ஆளுங்கட்சி நூலிழையில் தோல்வி : ஆட்சி அமைக்கின்றது எதிர்க்கட்சி கூட்டணி!

sweden
ஸ்வீடனில் ஆளுங்கட்சி நூலிழையில் தோல்வி : ஆட்சி அமைக்கின்றது எதிர்க்கட்சி கூட்டணி!
ஸ்வீடன் நாட்டில் சமீபத்தில் நடந்த தேர்தலில் ஆளும் கட்சி நூலிழையில் தோல்வி அடைந்த நிலையில் எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்வீடனில் நாடாளுமன்றத் தேர்தல் 11ஆம் தேதி நடைபெற்றது. 349 இடங்கள் கொண்ட இந்த தேர்தலில் பிரதமர் மகதலேனாவின் சமூக ஜனநாயகக் கட்சிக்கும் எதிர்க் கட்சியான ஸ்வீடன் ஜனநாயக கட்சிக்கும் இடையே பலத்த போட்டி இருந்தது
 
இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ஆளுங்கட்சியான பிரதமர் மகதலேனா ஆண்டர்சனின் கட்சி நூலிழையில் தோல்வியை தழுவியுள்ளது.  எதிர்க் கட்சியான ஸ்வீடன் ஜனநாயக கட்சியின் நான்கு கட்சிகளின் கூட்டணியில் ஆட்சி அமைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 ஸ்வீடன் நாட்டில் ஆட்சி அமைக்க 175 இடங்கள் தேவை என்ற நிலையில் எதிர்க்கட்சி கூட்டணி 17 இடங்களை வைத்துள்ளது என்பது ஆளும் கட்சி 173 இடங்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று இடங்கள் கூடுதலாக பெற்றதால் எதிர்க்கட்சியை ஆட்சி அமைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது