செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (12:01 IST)

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!

teachers
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் - முதல்வர் ஸ்டாலினுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என பகுதி நேர ஆசிரியர்கள் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். 
 
கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்ய செய்யப்படுவதாக வாக்குறுதி அளித்திருந்தது 
 
இந்த நிலையில் திமுக தனது வாக்குறுதியை ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் ஆகியும் நிறைவேற்றவில்லை என பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.
 
அரசு பள்ளிகளில் கடந்த 2012ஆம் ஆண்டு 16,000 பேர் பல்வேறு பாடங்களை பயிற்றுவிக்கும் பகுதி நேர ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டனர். தற்போது 12,000 ஆசிரியர்கள் பகுதிநேர ஆசிரியர்களாக உள்ள நிலையில் அவர்கள் அனைவரையும் பணி நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பப்பட்டு வருகிறது
 
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது