ஞாயிறு, 15 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (11:37 IST)

செல்போன், டி.வி. பார்க்க குழந்தைகளுக்கு தடை: அரசின் அதிரடி அறிவிப்பு..!

செல்போன் மற்றும் டிவி ஆகியவற்றை பார்க்க குழந்தைகளுக்கு தடை விதித்து ஸ்வீடன் நாட்டின் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் செல்போன் மற்றும் டிவி பார்க்க கூடாது என்றும் செல்போனை அதிக நேரம் பார்ப்பதால் குழந்தைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஸ்வீடன் நாட்டு அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

செல்போன் மற்றும் தொலைக்காட்சிகளை அதிக நேரம் பார்ப்பதால் குழந்தைகள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வின் முடிவு தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை செல்போன் மற்றும் தொலைக்காட்சியில் இருந்து முற்றிலும் விலக்கி வைக்க வேண்டும் என்றும் குழந்தைகளை செல்போன் பார்க்க அனுமதிக்க கூடாது என்றும் ஸ்வீடன் நாட்டு அரசு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

இரண்டு முதல் ஐந்து வயது குழந்தைகளை ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு மணி நேரம் மட்டுமே செல்போன் மற்றும் டிவி பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் ஆறு முதல் 12 வயது உடைய குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரம் பார்க்கலாம் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.

13 முதல் 18 வயது உடையவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி முதல் 3 மணி நேரம் மட்டுமே செல்போன் தொலைக்காட்சியை பார்க்க பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும் என்று ஸ்வீடன் நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Edited by Mahendran