புதன், 18 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (08:33 IST)

வேட்டையன் ரிலீஸ் தேதி முடிவில் பிடிவாதமாக இருந்த ரஜினிகாந்த்?

ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்தின் ஷூட்டிங்க் முடிந்துள்ள நிலையில் இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இடையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. ஆனால் இன்று ரிலீஸ் தேதியை வேட்டையன் படக்குழு உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் அக்டோபர் 10 ஆம் தேதியில் இருந்து சில நாட்கள் தள்ளிப் போகலாம் என இயக்குனர் தெரிவித்தாராம். ஆனால் ரஜினிதான், அந்த ரிலீஸ் தேதி முடிவில் பிடிவாதமாக இருந்தாராம். அதனால்தான் அந்த ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.