விஷக் காளான் சாப்பிட்ட சிறுவர்கள் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி போலாந்திற்குக் குடியேறிய குடும்பத்தில் இரண்டு சகோதரர்கள் விஷக்காளானில் சூப் வைத்துச் சாப்பிட்டு உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கப் படை முழுவதுமாக வெளியேறியது. இதனால் தாலிபான்கள் அந்நாட்டைக் கைப்பற்றியுள்ளனர். இது அந்நாட்டு மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதால் அங்கிருந்து பல்வேறு நாட்டினர் வெளியேறி வருகின்றனர்.
.இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி போலாந்திற்குக் குடியேறிய குடும்பத்தினர் அங்கு ஒரு முகாமில் தங்கியிருந்தனர்.
அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவு போதாமல் காட்டில் முளைத்த விஷக்காளானில் சூப் வைத்துச் சாப்பிட்ட 5 மற்றும் 6 வயதுடைய இரண்டு சகோதர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒரு சகோதரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.