புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (10:20 IST)

பின் லேடனின் மகன் இறந்துவிட்டாரா?: அமெரிக்கா தகவல்

ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின் லேடன் இறந்துவிட்டதாக அமெரிக்கா கூறியிருப்பது உலக நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன். செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதலை தொடர்ந்து அமெரிக்காவின் கழுகு கண்கள் பின் லேடனை வட்டமடிக்க தொடங்கின. 10 வருட தொடர் தேடுதல் வேட்டைக்கு பிறகு 2011ல் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின் லேடன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆனாலும் அல் கொய்தா அமைப்பு மற்ற தலைவர்களை கொண்டு மறைமுகமாக செயல்பட்டு கொண்டிருந்தது. அதில் முக்கியமான ஒருவர் ஒசாமா பின் லேடனின் மகன் ஹம்சா பின் லேடன். மத்திய கிழக்கு நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தார் ஹம்சா.

ட்ரம்ப் அமெரிக்க அதிபர் ஆன பிறகு ஹம்சாவின் பதுங்குதளம் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 1 மில்லியன் டாலர் பரிசு தொகை வழங்கப்படுமென அமெரிக்கா அறிவித்தது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடுக்கப்பட்ட அதிரடி தாக்குதல்களில் சிக்கி ஹம்சா உயிரிழந்திருக்க அதிகம் வாய்ப்பிருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.