செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 31 மே 2022 (15:11 IST)

மூக்கில் ரத்தம் வரவழைக்கும் மர்ம காய்ச்சல்! – ஈராக்கில் அதிர்ச்சி!

Cango Fever
நாள்தோறும் வித்தியாசமான நோய்கள் பரவி மக்களை பீதிக்கு உள்ளாக்கி வரும் நிலையில் ஈராக்கில் பரவ தொடங்கியுள்ள மர்ம காய்ச்சல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா கோரப்பிடியிலிருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில் அவ்வபோது பல்வேறு நோய்கள் திடீரென பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. சமீபத்தில் அவ்வாறாக ஐரோப்பிய நாடுகளில் பரவத் தொடங்கியுள்ள குரங்கு அம்மை மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போது ஈராக்கில் புதிய வகை காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது. இந்த காய்ச்சலுக்கு காங்கோ காய்ச்சல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் மூக்கில் ரத்தம் வடிவதாகவும், பாதிக்கப்படுபவர்களில் 5ல் ஒருவர் உயிரிழப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது மக்களிடையே மேலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.