1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 16 மே 2022 (21:06 IST)

கடுமையான புழுதிப்புயல்: ஆரஞ்சு நிறமாக காட்சியளித்த வானம்

iraq
கடுமையான புழுதிப்புயல்: ஆரஞ்சு நிறமாக காட்சியளித்த வானம்
ஈராக் நாட்டில் திடீரென கடுமையான புழுதிப்புயல் வீசியதை அடுத்து வானம் ஆரஞ்சு நிறத்தில் காணப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஈராக் நாட்டிலுள்ள பல மாநிலங்களில் இன்று திடீரென கடுமையான புழுதிப்புயல் வீசியது இதனையடுத்து எதிரே வருபவர் யார் என்று தெரியாத அளவிற்கு இருந்தது. இந்த புழுதிப் புயலால் ஈராக் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் சுகாதாரத்துறை தவிர மற்ற அனைத்து துறைகளும் மூடப்பட்டுள்ளதாக ஈராக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது
 
இந்த புழுதிப் புயல் காரணமாக ஈராக் நாட்டில் வானம் ஆரஞ்சு நிறத்தில் காணப் பட்டது என்பதும் ஈராக் நாட்டிற்கு வரும் சர்வதேச விமானங்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது