1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : சனி, 9 ஜூலை 2022 (21:32 IST)

பிரதமர் ரணில் பதவி விலகலா? இலங்கையில் என்ன நடக்கின்றது?

Ranil Wickramasinghe
இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே திடீரென தலைமறைவாகியுள்ள நிலையில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக தயார் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே தலைமறைவாக உள்ளதால் புதிய அதிபரை தேர்வு செய்ய இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலக தயார் என ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார். அனைத்து கட்சி கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்கே இந்த அறிவிப்பை வெளியிட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது
 
இதனால் இலங்கையின் எதிர்கால நிலை என்ன ஆகும் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது