ஹாலிவுட்டில் இருந்து கமல் சுட்ட படம்.. இப்போ ஹாலிவுட்டுக்கே போகுது!
கமல்ஹாசனின் திரைவாழ்வில் மிக முக்கியமானப் படமாக அமைந்த அன்பே சிவம் இப்போது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடிப்பில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
நடிகர் கமல்ஹாசன், மாதவன் மற்றும் கிரண் ஆகியோர் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அன்பே சிவாம். அந்த படத்தை கமல் பிளைன்ஸ் , ட்ரைன்ஸ் அண்ட் ஆட்டோமொபைல்ஸ் என்ற ஆங்கிலப் படத்தை தழுவி உருவாக்கிருந்தார். அப்போது அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், இப்போது வரை ரசிகர்கள் அந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த படத்தில் முன்னணி நடிகரான வில் ஸ்மித் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.