வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (14:16 IST)

நாசாவை ஓரங்கட்டிய எலன் மஸ்க்

ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனம் உலகிலேயே பெரிய ராக்கெட்டை விண்வெளியில் ஏவ இருக்கிறது. 

 
நாசா விண்வெளி துறையில் பல முக்கியமான காரியங்களை செய்து வருகிறது. இந்தியாவின் இஸ்ரோ, சீனா, ரஷ்யா உள்பட பல உலக நாடுகள் விண்வெளி துறையில் முக்கிய பங்காற்றி வருகிறது.
 
வெளியே தெரியாத சில தனியார் நிறுவனங்களும் விண்வெளி துறையில் சில காரியங்களை செய்து வருகின்றனர். அதில் ஒன்று ஸ்பேஸ் எக்ஸ். அமரிக்காவை சேர்ந்த கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் என்பவருக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உலகிலேயே பெரிய ராக்கெட்டை இன்று விண்வெளியில் ஏவ உள்ளது.
 
இந்த ராக்கெட்டுக்கு ஃபல்கான் ஹெவி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி மதியம் 2.00 மணிக்கு மேல் விண்ணில் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் உலகிலேயே சக்தி வாய்ந்த ராக்கெட் ஆகும். இதன் மூலம் மனிதர்களை எளிதாக செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப முடியும் என்று கூறப்படுகிறது.
 
தற்போது இந்த ராக்கெட் எந்த ஒரு காரணத்துக்காகவும் அனுப்பப்படவில்லை. எதிர்காலத்தில் இதை குறிப்பிட்ட காரணங்களுக்காக அனுப்ப திட்டம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.