மேலும் 52 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய ஸ்பேஸ் எக்ஸ்!
பிரபல தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மேலும் 52 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளது.
அமெரிக்க தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் தனது ஸ்டார் லிங்க் இணைய சேவை தொழில்நுட்பத்திற்காக தொடர்ச்சியாக 1500 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. அதன்படி 200+ செயற்கை கோள்கள் முன்னதாக அனுப்பப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 52 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளது.
விண்வெளியில் தொடர்வண்டி போல ஒன்றன் பின் ஒன்றாக பயணிக்கும் இந்த செயற்கை கோள்கள் உலகம் முழுவதும் அதிவேக இணைய வசதியை வழங்கும் என கூறப்பட்டுள்ளது.