1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 29 நவம்பர் 2021 (12:24 IST)

ஒமிக்ரான் அறிகுறிகள் என்னென்ன?

தற்போது ஒமிக்ரான் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்துக்கொள்ள இதற்கான அறிகுறிகள் என்னவென தகவல். 

 
தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்னும் புதிய கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய நிலையில் ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இதன் பாதிப்புகள் தென்பட தொடங்கியுள்ளன. இது உலக நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் ஒமிக்ரான் பரவாமல் ஆரம்பத்திலேயே தடுக்க பல்வேறு முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது ஒமிக்ரான் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்துக்கொள்ள இதற்கான அறிகுறிகள் என்னவென தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஒமிக்ரான் வைரஸ் அறிகுறிகள்:
1. அளவுக்கு அதிகமான சோர்வு
2. தசைகளில் வலி
3. கரகரப்பான தொண்டை
4. வறட்டு இருமல்