திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 31 ஜூலை 2022 (10:38 IST)

துப்பாக்கி முனையில் 8 இளம்பெண்கள் வன்கொடுமை! – பட ஷூட்டிங்கில் நடந்த கொடூரம்!

abuse
ம்யூசிக் ஆல்பம் வீடியோ படப்பிடிப்பில் கலந்து கொண்ட 8 பெண்கள் துப்பாக்கி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகனஸ்பர்க் பகுதியில் உள்ள சிறு நகரம் ஒன்றில் ம்யூசிக் வீடியோ ஒன்றிற்கான படப்பிடிப்பில் ஆண்கள் மற்றும் பெண் மாடல்கள் பலர் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதிக்கு துப்பாக்கியுடன் வந்த கும்பல் ஒன்று, மாடல் பெண்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்த ஆண்களை நிர்வாணப்படுத்தியதுடன், அங்கிருந்தவர்களிடம் பணம் உள்ளிட்டவற்றையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் குற்ற செயலில் ஈடுபட்ட கும்பலை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அதிபர் சிரில் ரமபோசா தெரிவித்துள்ளார்.