செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (08:59 IST)

ஒருவர் மூலம் 406 பேருக்கு கொரோனா பரவலாம்: உலக சுகாதார மையம் எச்சரிக்கை

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் மூலம் 406 பேருக்கு கொரோனா வைரஸ் பரவலாம் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் தனக்கு கொரோனா இருப்பதை அறியாமல் வெளியே சுற்றிக் கொண்டிருந்தால் அவர் மூலம் 406 பேருக்கு கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதாகவும் எனவே பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்
 
மாஸ்க் அணிவது முக்கியம் என்றாலும் அதைவிட முக்கியம் தனிமனித இடைவேளை என்றும் ஒருவருக்கு ஒருவர் இடைவெளி குறைந்தது 5 அடி இருக்க வேண்டும் என்றும் அவ்வாறு இருந்தால் மட்டுமே வெளியே செல்லும் நபர்கள் கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது 
 
முறையாக சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால் ஒருவர் மூலம் 406 பேருக்கு கொரோனா வைரஸ் பரவ வாய்புபு என்றும் சமூக இடைவெளியை 50% கடைபிடித்தாலே ஒருவரிடமிருந்து 15 பேருக்கு வைரஸ் பரவுவதை தடுக்க முடியும் என்றும் உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது