விவேக் இறப்புக்குப் பின்னர் கொரோனா தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை குறைவு!
நடிகர் விவேக் மரணத்துக்கு பிறகு சென்னையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அடுத்த நாளே மாரடைப்பு வந்து இறந்தார். ஆனால் அவரின் மரணத்துக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று வல்லுனர்கள் கூறினார். ஆனாலும் விவேக்கின் மரணம் பொதுமக்கள் இடையே ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக சென்னையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிக அளவு குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் தயங்காமல் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வல்லுனர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.