செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (08:42 IST)

வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழோடு வரவேண்டும்… தேர்தல் ஆணையம்!

வாக்கு எண்ணிக்கை வரும் ஞாயிற்றுக் கிழமை நடக்க இருக்கும் நிலையில் கட்சி சார்பாக வரும் முகவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழோடு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழகம் உள்பட  5 மாநிலங்களுக்கு நடந்து வரும் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை  வரும் மே 2 ஆம் தேதி நடக்க உள்ளது. அதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு வேட்பாளர்களுக்காக வரும் முகவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழோடு வர வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.