பாலைவனத்தில் பனிப்பொழிவு; என்ன நடக்குது? ஆய்வாளர்கள் வியப்பு
உலகிலே அதிக வெப்பம் நிலவ கூடிய சஹாரா பாலைவனத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது ஆய்வாளர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகிலேயே அதிக வெப்பம் நிலவக்கூடிய பாலைவனம் சஹாரா. இது ஆப்பரிக்காவின் வடபகுதியில் அமைந்துள்ளது. சஹாரா பாலைவனத்தின் அய்ன்செப்ஃரா மற்றும் அல்ஜீரியா ஆகிய இடங்களில் கடந்த ஞாயிற்று கிழமை முதல் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
சுமார் 15 இன்ச் உயரத்துக்கு பனிக்கட்டிகள் பாலைவனத்தை மூடியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் தற்போது மூன்றாவது முறை இங்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் இம்முறை அதிகளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
மேலும், ஐரோப்பிய பகுதியில் ஏற்பட்டுள்ள அதிக அழுத்தம் மற்றும் குளிர் காற்று இந்த பனிப்பபொழிவுக்கு காரணம் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.