1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 9 ஜனவரி 2018 (15:32 IST)

3 வயது குழந்தையை ஆவேசமாய் தாக்கிய கொடூர தாய்: அதிர்ச்சி வீடியோ!!

அர்ஜெண்டினாவில் தாய் ஒருவர் தனது மூன்று வயது மகளை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விடியோ ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்பட்டுள்ளது. 
 
மூன்று குழைந்தைகளுக்கு தாயான இந்த பெண் தனது, மூத்த மகளை கொடூரமாக தாக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 வயதேயான இந்த குழந்தை டேப் வைத்து விளையாடிவிட்டு அதனை கவனக்குறைவாக எங்கேயோ வைத்துவிட்டதால் அந்த பெண் குழந்தையை கொடூரமாக தக்கியுள்ளார். 
 
மேலும், டேப் கிடைக்கவில்லை என்றால் உன்னை கொன்றுவிடுவேன் என கூறி குழந்தையின் முடியை பிடித்து தூக்கி அடித்தும் எட்டி உதைத்தும் கொடுமை படுத்தியுள்ளார். இது குறித்த தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருவதால், அந்த பெண்ணை கைது செய்யகோரி கண்டனங்கள் வலுத்து வருகின்றன. 

நன்றி: Mail One