1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 9 ஜனவரி 2018 (10:35 IST)

தேர்தலில் சீட் கேட்ட நடிகை : நிர்வாணமாக நிற்க சொன்ன நபர்

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சீட் கேட்ட நடிகையிடம் லஞ்சமாக அவரை நிர்வாணமாக நிற்க சொன்ன சம்பவம் இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
இலங்கையில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில், மகிந்த ராஜபக்சேவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் சார்பாக நடிகை மதுசா ராமசிங்கே போட்டியிட விரும்பியுள்ளார்.
 
இதையடுத்து, ராஜபக்சேவின் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் மதுசா உதவி கேட்டுள்ளார். ஆனால், அவரோ, அதற்கு லஞ்சமாக, மதுசாவை படுக்கைக்கு அழைத்ததோடு, தன் முன் நிர்வாணமாக நிற்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

 

 
இந்த விவகாரத்தை ஊடகங்களிடம் பகிர்ந்து கொண்ட நடிகர் மதுசா, இதுபற்றி ராஜபக்சேவிடம் புகார் கூறினேன். ஆனால், அவரோ ‘சாரி’ என்று மட்டும் கூறிவிட்டு சென்றுவிட்டார் என பேட்டியளித்துள்ளார்.