திங்கள், 17 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 25 ஜூலை 2025 (17:15 IST)

ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில்.. சென்னை ஐசிஎப் சோதனை வெற்றி..!

ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில்.. சென்னை ஐசிஎப் சோதனை வெற்றி..!
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பின்படி, சென்னை ஐசிஎஃப்  தொழிற்சாலையில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் இந்தியாவின் முதல் ரயில் எஞ்சின் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.
 
சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த ஹைட்ரஜன் ரயில் எஞ்சின் தயாரிக்க ரூ. 2,000 கோடி ஒதுக்கப்பட்டது. 2024 இல் தொடங்கிய பணிகள் முடிவடைந்த நிலையில், இந்த சோதனை இந்தியாவை ஹைட்ரஜன் ரயில் தொழில்நுட்பத்தில் முன்னணி நாடாக்கும் என அமைச்சர் தன் 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்தார்.
 
1,200 ஹெச்பி திறன் கொண்ட இந்த எஞ்சின், கார்பன் வெளியேற்றத்தை குறைக்கும் முக்கிய அம்சமாகும். நாட்டிலேயே முதன்முறையாக, இந்த ரயில்கள் ஜிந்த் மற்றும் சோனிபேட் ரயில் நிலையங்களுக்கு இடையே இயக்கப்படவுள்ளன.
 
ஏற்கனவே உலகின் சில நாடுகளில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ள நிலையில், இந்தியாவின் இந்த புதிய  முயற்சி, இந்திய ரயில்வேயின் நவீனமயமாக்கலுக்கு ஒரு மணிமகுடமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
 
Edited by Siva