செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 15 நவம்பர் 2017 (18:57 IST)

சவுதி பாலைவன அரசனான இந்தியர்!!

எகிப்து மற்றும் சூடான் நாட்டுக்கு இடையே உள்ள பாலைவன பகுதியை தனக்கு சொந்தம் என உரிமை கொண்டாடியுள்ளார்.


 
 
எகிப்து மற்றும் சூடானுக்கு இடையில் 800 சதுர மைல் வறண்ட பாலைவன பகுதி ஒன்று உள்ளது. இந்த பகுதிக்கு எகிப்து, சூடான் நாடுகள் ஏதும் சொந்தம் கொண்டாடவில்லை. 
 
ஆதரவற்ற இந்த பகுதியில் மனிதர்களும் வசிப்பதில்லை. இந்நிலையில் இந்தியாவின் இந்தூரை சேர்ந்த தீக்ஷித் என்ற இளைஞர் இந்த பாலைவனத்தை சொந்தம் கொண்டாடியுள்ளார்.
 
இது எனது நாடு என்றும், இன்று முதல் நான் இந்நாட்டின் அரசன் நான் என்றும் கூறி, இந்த பகுதிக்கு ’கிங்டம் ஆப் திக்‌ஷித்’ என்று பெயரிட்டுள்ளார். 
 
மேலும் பாலைவனத்தில் விதைகள் தூவி அதற்குத் தண்ணீர் உற்றியுள்ளாரம். அதோடு தனக்கான கொடி ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.
 
இது எனது நாடு, யாருக்காவது இந்த நாடு கிடைக்க வேண்டும் என்றால், போர் செய்து எடுத்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.