திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 7 டிசம்பர் 2022 (17:12 IST)

இறந்தவரின் தொடையில் உயிருடன் இருந்த வெளியே வந்த பாம்பு: அலறிய - பிரேத பரிசோதனை ஊழியர்கள்

snake
இறந்தவர் ஒருவரை பிரேத பரிசோதனை செய்து கொண்டிருந்த போது அவரது தொடையில் இருந்து உயிருடன் ஒரு பாம்பு வெளியே வந்ததை அடுத்து பிரேத பரிசோதனை ஊழியர்கள் அலறியடித்து கொண்டு ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
அமெரிக்க மருத்துவமனையில் 31 வயது பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது உடலை பிரேத பரிசோதனை ஊழியர்கள் பிரேத பரிசோதனை செய்து கொண்டிருந்தனர் 
 
அப்போது இறந்தவரின் உடலை அறுத்து கொண்டிருந்தபோது திடீரென பாம்பு ஒன்று உயிருடன் வெளியே வந்தது. இதை பார்த்து பிரேத பரிசோதனை ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர்
 
அதன் பிறகு வனத்துறை அதிகாரிகள் பாம்பை பிடித்த பிறகு மீண்டும் பிரேத பரிசோதனை பணி தொடங்கியது. ஒரு ஓடையில் அழுகிய நிலையில் அந்த உடல் கண்டெடுக்கப் பட்டதாகவும் அப்போது அந்த உடலுக்குள் பாம்பு புகுந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran