1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 28 ஜூலை 2017 (21:16 IST)

சிப்ஸ் டப்பாவிற்குள் அடைத்து கடத்தி செல்லப்பட்ட ராஜ நாகங்கள்!!

சிப்ஸ் டப்பாவிற்குள் அடைத்து கடத்தி செல்லப்பட்ட ராஜ நாகங்கள்!!
கலிஃபோர்னியாவில் இருந்து வந்த ஒரு பார்சலை சோதனை மேற்கொண்டதில் அதில் இருந்து 3 ராஜ நாகங்கள் பிடிபட்டன. 


 
 
ஹாங்காங்கில் இருந்து கடந்த சில் நாட்களுக்கு முன்னர் கலிஃபோர்னியாவுக்கு விமானம் மூலம் ஒரு பார்சல் வந்தது. 
 
அதை சுங்க வரி துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த பார்சலில் இருந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் டின்னை சோதனை செய்த போது அதில் 3 ராஜநாகங்கள் அடைக்கப்பட்டு கடத்திவரப்பட்டது தெரியவந்தது. 
 
யாரை இதை செய்தார் என்பதை கண்டுபிடித்த போலீசார் அந்த நபரிடம் அவரிடம் விசாரணை நடத்தியதில் இதுபோன்று பார்சலில் கடத்திய 20 ராஜநாகங்கள் இறந்து கிடந்ததாக தெரிவித்தார்.