1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 26 ஜனவரி 2018 (06:40 IST)

இரண்டேகால் கோடி ரூபாய்க்கு ஒரு அழகிய தீவு:

ஸ்காட்லாந்து நாட்டில் கடலுக்கு நடுவில் உள்ள தீவு விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அழகிய இந்த தீவின் பெயர் லிங்கா.

சுமார் 65 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தீவில் பாழடைந்த இரண்டு காட்டேஜ் மற்றும் பண்ணை நிலங்கள் உள்ளன. மின்சார தேவைக்கென ஒரு குட்டி காற்றாலை ஒன்றும் இந்த தீவில் உள்ளது.

மிகவும் அழகிய காட்சியமைப்பு கொண்ட இந்த தீவு இந்திய மதிப்பில் இரண்டே கால் கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையில் லண்டனில் ஒரு வீடு வாங்குவதற்கு தேவையான தொகையில் பாதி என்பது குறிப்பிடத்தக்கது

கரையில் இருந்து 500 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த தீவுக்கு படகில் மட்டுமே செல்ல முடியும்.