வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 8 ஜனவரி 2018 (14:56 IST)

உணவில் விஷம் கலந்து பெற்றோரைக் கொள்ள முயன்ற மகன் கைது

இங்கிலாந்தில் தனது பெற்றோரை கொல்ல அவர்கள் சாப்பிடும் உணவில் விஷம் கலந்து கொடுத்த மகனை போலீசார் கைது செய்தனர்.
இங்கிலாந்தில் உள்ள பெட்போர்ட்‌ஷயர் கவுண்டியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். இவர் தனது மனைவி ஸ்டெப்னி மற்றும் மகன் ரிச்சர்ட் ஹிக்நெட்டுடன்  வசித்து வந்தார். ரிச்சர்ட் தனது பெற்றோரை கொல்ல திட்டமிட்டு அவர்கள் சாப்பிடும் உணவில் வி‌ஷம் கலக்க முடிவெடுத்தார். அதை தொடர்ந்து அவர்கள் சாப்பிடும் உணவில் வி‌ஷம் கலந்துள்ளார். விஷம் கலந்த உணவை சாப்பிட்ட ரிச்சர்டின் பெற்றோர்கள் சிறிது நேரத்தில் மயக்கமடைந்தனர்.  சிறிது நேரம் கழித்து ஜேம்ஸ் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் ஜேம்ஸ் மற்றும் ஸ்டெப்னியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் ரிச்சர்டை கைது செய்தனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதற்கிடையே ரிச்சர்ட் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தப்பட்டார். அப்போது தனது பெற்றோரை கொல்ல வில் அம்பு வாங்கி வைத்திருப்பதாக கூறினார். எனவே நீதிமன்ற உத்தரவுபடி அவர் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.