நாயென்று நினைத்து கரடியை வளர்த்த பாடகி:வனவிலங்குத் துறையினரால் கைது

Last Updated: செவ்வாய், 18 ஜூன் 2019 (19:19 IST)
மலேசியாவைச் சேர்ந்த பாடகி ஒருவர், நாய் என நினைத்து கரடியை வளர்த்ததால் வனவிலங்கு துறையினர் அவரை கைது செய்து உள்ளனர்.

மலேசியா நாட்டின் பிரபலமான பாடகி ஸரித் ஸோஃபியா. இவர் ஒரு கரடியை செல்லப்பிராணியாக வளர்த்துள்ளார்.

ஒரு நாள் அந்த கரடி ஸரித் வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளது. அதை கண்ட ஒருவர் சமூக வலைத்தளங்களில் வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோ பரவலாக வைரலானதால் வனவிலங்குத் துறை  அதிகாரிகளுக்கு தெரியவந்திருக்கிறது. பின்பு உடனடியாக பாடகி ஸரித்தை கைது செய்துள்ளனர்.

இது குறித்து வனத்துறையினர் ஸரித்திடம் கேட்டபோது, இரவில் ஒரு நாள் வீட்டிற்கு வந்துகொண்டிருந்த போது, சாலையோரம் ஏதொ குட்டி ஒன்று தவித்துகொண்டிருந்ததாகவும், பார்ப்பதற்கு நாய் குட்டி போல் இருந்ததால் நாய் என்றே நினைத்து வீட்டிற்கு அழைத்து வந்தேன் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

பாடகி ஸரித் வளர்த்த கரடி ஜன்னல் வழியே எட்டிபார்த்த வீடியோ,சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :