திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 17 ஜூன் 2019 (19:45 IST)

பாகிஸ்தான் பெண்களை பாலியல் தொழிலில் தள்ளும் சீனர்கள்:திடுக்கிடும் தகவல்

பாகிஸ்தானில் பெண்களை திருமணம் செய்து சீனாவில் பாலியல் தொழிலில் தள்ளுவதாக, திடுக்கிடும் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.

மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள நாடு சீனா. தற்போது சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது

இந்நிலையில் சீனாவில் ஆண் குழந்தைகளுக்கு  நிகரான பெண் குழந்தைகளின் விகிதம் சராசரியாக குறைந்து கொண்டே வருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

இதனால் திருமணம் ஆகாத சீன ஆண்களுக்கு பெண் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது. ஆதலால் திருமணம் ஆகாத ஆண்கள் பாகிஸ்தான் பெண்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

சீன ஆண்கள் பாகிஸ்தானில் ஏஜெண்டுகள் மூலம் பெரும் தொகையை கொடுத்து பெண்களை திருமணம் செய்து கொள்கின்றனர். பெரும்பாலும் இஸ்லாமிய குடும்பங்கள் இந்த திருமணத்திற்கு சம்மதிப்பதில்லை.

ஆதலால் அவர்கள் கிறுஸ்துவ குடும்பங்களையே குறிவைக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. சீனாவில் எதிர்காலம் நல்ல படியாக அமையும் என்று பொய் கூறி பெற்றோர்களும் பெண்களை அனுப்பி வைத்துவிடுகின்றனர்.

ஆனால் அங்கு அவர்கள் அடிமைகள் போல் நடத்தப் படுகிறார்கள் என்று குற்றசாட்டுகள் வந்துகொண்டிருக்கின்றன. பெரும்பாலான திருமணங்களில் மணப்பெண்களின் வயது, மணமகன்களின் வயதில் பாதி கூட இருப்பதில்லை என்ற கொடுமையும் நிகழ்கிறது.

இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக பாகிஸ்தானில் பெண்களை வாங்கி சீனாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் இது குறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த பாலியல் தொழிலிலிருந்து மீட்கப்பட்ட நதாசா என்ற இளம்பெண், தன்னுடைய கணவர் தன்னை பாகிஸ்தானிலிருந்து விலைக்கு வாங்கியதாகவும், அங்கே தன்னை பாலியல் தொழிலுக்கு தள்ளினார் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை சீன தூதரகம் மறுக்கிறது.பாகிஸ்தான் சமூக ஆர்வலர்கள் இந்த குற்றச்சாட்டுகளில்லாம் உண்மை என்றும், இதற்கு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.