புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 18 ஜூன் 2019 (12:22 IST)

800 ஆண்டுகள் பழமையான கொடி:கொண்டாடிய நாட்டு மக்கள்

டென்மார்க்கில் உலகிலேயே 800 ஆண்டுகள் பழமையானதும்,  தற்போதைய பயன்பாட்டிலும் உள்ள கொடியினை பாதுகாத்து, அந்நாட்டினர் கொண்டாடியுள்ளனர்.

ஐரோப்பா கண்டத்தில் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் நாடு டென்மார்க். இந்நாடு பல குட்டி தீவுகளையும் கொண்டுள்ளது.

டென்மார்க் நாட்டின் தலைநகர் கோப்பென்கன் அருகே அமைந்துள்ளது வாடின்போ. அந்நகரத்தில் உலகிலேயே 800 ஆண்டுகள் பழமையான கொடி ஒன்றை பாதுகாத்து வருகின்றனர்.

மேலும் அந்த வரலாற்று சிறப்புமிக்க கொடி உருவாக்கப்பட்டு 800 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி அந்நாட்டினர் விழா நடத்தினர். அந்த விழாவில் பல அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

அப்பகுதியில் உள்ள மிகப் உயரிய கொடி கம்பத்தில் அக்கொடி ஏற்றப்பட்டது. இந்த விழாவில் டென்மார்க்கில் பல பகுதிகளிலிருந்து வந்த மக்கள் கோலாகலமாக கொண்டாடினர்.

உலகிலேயே 800 ஆண்டுகள் பழமையான கொடியை பாதுகாத்து வருகிற ஒரே நாடு டென்மார்க் என்பது குறிப்பிடத்தக்கது.