வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (13:56 IST)

4 மாணவர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சிறுவன்.. பெற்றோருக்கு 15 ஆண்டுகள் சிறை..!

அமெரிக்காவில் நான்கு மாணவர்களை சிறுவன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததை அடுத்து அந்த சிறுவனின் பெற்றோருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிறுவன் தன்னுடன் படிக்கும் நான்கு மாணவர்களை சுட்டுக் கொன்ற வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் மாணவனின் பெற்றோர்களும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்த நிலையில் விசாரணைக்கு பின்னர் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் நான்கு மாணவர்கள் உயிரிழந்ததாகவும் 7 மாணவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படும் நிலையில் பெற்றோர்கள் தங்களது மகனின் மனநிலையை கவனிக்க தவறியதாகவும் வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை தற்போது முடிவடைந்துள்ள நிலையில் நீதிபதி அளித்த தீர்ப்பில் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் சிறுவனுக்கு பரோல் இல்லாத சிறை தண்டனையும் மகனின் மனநிலையை கவனிக்க தவறிய அலட்சிய நோக்கத்திற்காக பெற்றோர்களுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran