1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Shooting in Mexico bar 9 people killed

மெக்சிகோ மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு- 9 பேர் பலி!

Shooting in Mexico bar
மெக்சிகோ நாட்டில் ஒரு மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ நாட்டில் உள்ள குவானாஜூவாடோ மாகாணம் அபாசியோ எல் ஆல்டோ நகரில் பிரபலமான மதுபான விடுதி ஒன்று இயங்கி வருகிறது.

இந்த விடுதியில் கடந்த புதன் கிழமை அன்று இரவு 9 மணிக்கு ஒரு மர்ம கும்பல் புகுந்து திடீரென்று துப்பாக்கியால் சுட்டது.

இதில், மதுபான விடுதி பணியாளர்கள் 4 பேர் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும், 2 பெண்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Edited by Sinoj
 
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
தொடர் கனமழை: யாருக்கெல்லாம் எங்கெல்லாம் விடுமுறை??