ஷேக் ஹசீனா இனி தேர்தலில் வாக்களிக்க முடியாது: வங்கதேச தேர்தல் ஆணையம் தகவல்..!
ஷேக் ஹசீனாவின் தேசிய அடையாள அட்டை முடக்கப்பட்டதால், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ள தேர்தலில் அவரால் வாக்களிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனா, அண்மையில் நடந்த மாணவர் போராட்டங்கள் காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது, அவரது தேசிய அடையாள அட்டை முடக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனால், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் அவரால் வாக்களிக்க முடியாது. இது தொடர்பாக பேசிய தேர்தல் ஆணையத்தின் செயலாளர், அடையாள அட்டை முடக்கப்பட்டவர்கள் வெளிநாட்டிலிருந்து வாக்களிக்க முடியாது என்று விளக்கமளித்துள்ளார்.
மேலும், ஹசீனாவின் குடும்ப உறுப்பினர்கள் பலரின் தேசிய அடையாள அட்டைகளும் முடக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Edited by Mahendran