ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 6 ஜனவரி 2024 (16:21 IST)

இசை புயலுக்கு இன்று பிறந்தநாள்.!- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயலுக்கு வாழ்த்துக்கள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
 
தனது இசையால் ரசிகர்களை கட்டிப்போட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
 
திரையுலகில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இசையால் ஆட்சி செய்து கொண்டிருக்கும் ரஹ்மான் எனும் இசைப்புயல்,  ஆஸ்கர், தேசிய விருது உட்பட 175 விருதுகளை பெற்று ஆசியாவிலேயே அதிக விருதுகளை பெற்ற இசையமைப்பாளர் என்கிற சாதனையும் படைத்துள்ளார்.
 
cm rahman
இந்நிலையில் அவருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர், இசையால் உலகையும் உள்ளங்களையும் வென்று, என்றும் அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல்  @arrahman அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.