மேலாடையின்றி பாட்டு பாடிய டென்னிஸ் வீராங்கனை செரினா

serena
Last Updated: திங்கள், 1 அக்டோபர் 2018 (13:37 IST)

உலகமெங்கும் மார்பக புற்றுநோய் தாக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அமெரிக்காவை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை மேலாடையின்றி பாட்டு பாடிய வீடியோ வைரலாகி வருகின்றது.

ஐ டச் மைசெல்ஃப்’ என்ற தொடங்கும் இந்த பாடலின் வீடியோவை செரினா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியான ஒருசில மணி நேரத்தில் 1.3 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

மார்பக புற்றுநோய் குறித்து பெண்களை விழிப்புணர்வு ஏற்படுத்தவே இவ்வாறு பாடல் பாடியதாகவும், வரும்முன் காப்பதே நல்லது என்றும் செரினா கூறியுள்ளார். மேலும் பெண்கள் தங்கள் மார்பகங்களை கையால் அவ்வப்போது சோதனை செய்து சோதனை செய்தாலே ஏராளமானவர்களின் உயிரை காக்க முடியும் என்றும் செரினா கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :