வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 9 ஜூலை 2024 (13:47 IST)

மளிகைக்கடையில் துப்பாக்கி குண்டுகள் விற்பனை.. இயந்திரத்தை அறிமுகம் செய்த அமெரிக்க அரசு..!

துப்பாக்கிக்கு தேவையான குண்டுகளை இனிய மளிகை கடையில் உள்ள இயந்திரத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அமெரிக்காவில் ஏற்கனவே துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து உள்ளது என்பதும் பள்ளிகள் உள்பட பல இடங்களில் மர்ம நபர்கள் திடீர் திடீர் என துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் துப்பாக்கிக்கு தேவையான குண்டுகளை இனிமேல் இயந்திரம் பெற்றுக் கொள்ளலாம் என்றும், ஏடிஎம் எந்திரத்தில் எப்படி பணம் வருகிறதோ அதேபோல் இந்த இயந்திரத்தில் துப்பாக்கி குண்டுகள் கிடைக்கும் என்றும் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. 
 
துப்பாக்கி லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து உரிய பணம் செலுத்தினால் இந்த இயந்திரத்தின் மூலம் தேவையான குண்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
முதல் கட்டமாக இந்த இயந்திரம் அலபாமா, டெக்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த இயந்திரத்துக்கு கிடைக்கும் வரவேற்பை குறித்து அமெரிக்காவின் பல இடங்களில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Siva