வியாழன், 6 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 6 மார்ச் 2025 (14:04 IST)

ஐக்கிய அரபு அமீரகத்தில் மேலும் 2 இந்தியர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்.. அதிர்ச்சி தகவல்..!

ஐக்கிய அரபு அமீரகத்தில்  கடந்த மூன்றாம் தேதி உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் குழந்தையை கொன்ற குற்றத்திற்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் இரண்டு இந்தியர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
கேரளம் மாநிலத்தைச் சேர்ந்த கண்ணூர் என்ற பகுதியை சேர்ந்த முகமது ரினேஷ் என்பவர் டிராவல் ஏஜென்சியில் வேலை பார்த்து வந்த நிலையில் இவர் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார்.
 
அதேபோல் கேரளாவை சேர்ந்த இன்னொரு நபரான முரளிதரன் என்பவரும் இந்த கொலை சம்பவத்தில் தொடர் இருப்பதாக தெரியவந்ததை அடுத்து இருவருக்கும் மரண தண்டனை அளிக்கப்பட்டது.
 
இது குறித்து தகவல் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு ஐக்கிய அரபு அமீரகம்தகவல் தெரிவித்த நிலையில்  இருவருக்கும் தூக்கு தண்டனை  நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுவரை 28 இந்தியர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran