வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: திங்கள், 8 ஜூலை 2024 (14:13 IST)

தமிழக உரிமம் பெற்ற துப்பாக்கி உரிமையாளர்களுக்கான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!

தமிழக உரிமம் பெற்ற துப்பாக்கி உரிமையாளர்களுக்கான நலச்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது 
 
ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியும்,மனநல ஆய்வு வாரியத்தின் தலைவருமான செந்தில்குமரேசன் இந்நிகழ்வை தலைமை தாங்கி பேசினார்.
 
நலசங்கத்தின் மாநிலத் தலைவர் வரதராஜன் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல் பாஸ்கரன், பரிசுத்தம் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்லூரி தலைவர் அந்தோணிசாமி, ஈரோடு முகமது அலி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
 
கூட்டத்தில் நல சங்கத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசித்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
மாநிலம் முழுவதிலும் இருந்து திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
 
முடிவில் நலச்சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் முகமது அக்பர் நன்றி கூறினார்.