வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 5 ஜூலை 2024 (08:34 IST)

அமெரிக்காவில் ஒரு நாய் பட்டம் வாங்கியுள்ளது: தனது பேச்சுக்கு ஆர்.எஸ்.பாரதி விளக்கம்..!

R S bharathi
சமீபத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி இப்போதெல்லாம் நாய் கூட பட்டம் வாங்குகிறது என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
நான் பேசியதை எதிர்க்கட்சிகள் திரித்து வெளியிடுகின்றனர். நாய் கூட பிஏ பட்டம் வாங்குகிறது என்று நான் சொல்லிவிட்டேன் என்று கூறுகிறார்கள். தன்னையொத்த பார்ப்பனர் அல்லாதவர் சமூகத்தின் வளர்ச்சியை இப்படி சொல்லும் நோக்கம் எனக்கு இல்லை என்பதை திராவிட இயக்கத்தை உணர்வுபூர்வமாக புரிந்தவர்கள் மட்டும் அறிவார்கள்.
 
ஆனால் உண்மையில்  நாய் பட்டம் வாங்கியது என்பது நடந்தது ஒன்றுதானே , அமெரிக்காவில் ஜஸ்டின் என்ற நாய் டிப்ளமோ பட்டம் வாங்கி உள்ளதே என்று திமுக அமைப்பின் செயலாளர் ஆர்எஸ் பாரதி விளக்கம் அளித்துள்ளார்
 
ஆர்.எஸ். பாரதி பேச்சு குறித்து நடிகை கஸ்தூரி கூறுகையில், ‘மனதில் பட்டதை பேசவில்லை, வாய்க்கு வந்தபடி பேசியுள்ளார். தகுதி அடிப்படையில் இல்லாமல் இவரை போன்றோர் பட்டம் பெற்றதற்கு  சாதிவாரி இடஒதுக்கீட்டு பிச்சை கிடைத்ததே காரணம். திராவிட இயக்க இட ஒதுக்கீட்டின் பலனாக இன்று பல பட்டதாரி நாய்கள்’ என்று கூறியுள்ளார்.
 
Edited by Siva