திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 12 செப்டம்பர் 2022 (17:27 IST)

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அபார வெற்றி!

eng vs sa
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அபார வெற்றி!
இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 3-வது டெஸ்ட் போட்டி இன்று முடிவடைந்துள்ள நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 
 
இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 118 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 169 ரன்கள் எடுத்திருந்தது
 
இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 158 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களத்தில் இறங்கியது. அந்த அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து உள்ள நிலையில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாகவும், தென்ஆப்பிரிக்க அணியின் ரபடா தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்கள்.