செவ்வாய், 21 மார்ச் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified சனி, 3 டிசம்பர் 2022 (16:53 IST)

பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெறும் எஸ் ஜே சூர்யாவின் ‘வதந்தி’ வெப் சீரிஸ்

எஸ் ஜே சூர்யா நடிப்பில் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ள வதந்தி வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

சமீபத்தில் எஸ் ஜே சூர்யா மாநாடு, டான் உள்ளிட்ட படங்களில்  வில்லனாக நடித்து பாராட்டுகளைக் குவித்தார். அதையடுத்து அவர் கொலைகாரன் பட இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் ‘வதந்தி’ வெப் தொடரில் நடித்துள்ளார். அந்த தொடர் நேற்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியானது.

ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள இந்த தொடர், வெலோனி என்ற 20 வயது பெண்ணின் மரணமும், அதையொட்டி பரவும் வதந்திகளும் என ஒரு திரில்லர் சீரிஸாக உருவாகியுள்ளது. ஜப்பானிய கிளாசிக் படமான ரஷோமான் பாணியில் ஒரு சம்பவத்தைப் பலரது பார்வைகளை சொல்லும் கதைக்களமாக உருவாகியுள்ள இந்த தொடர் ரசிகர்களால் பார்க்கப்பட்டு பாசிட்டிவ்வான விமர்சனங்களை சமூகவலைதளங்களில் பெற்று வருகிறது.