சொகுசு கார் மோதி 7 பேர் பலி - கோவையில் அதிர்ச்சி

covai
Last Modified புதன், 1 ஆகஸ்ட் 2018 (11:19 IST)
கோவையில் சொகுசு கார் மோதி 7 பேர் சம்பவ இடத்திலே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சுந்தராபுரத்தில் அதிவேகமாக வந்த சொகுசு சாலையோரம் பேருந்துக்காக நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் மீதும் ஆட்டோ ஒன்றின் மீதும் கடுமையாக மோதியது. இதில் அந்த ஆட்டோ அருகிலிருந்த கரண்ட கம்பத்தின் மீது மோதி முழுவதுமாக நொறுங்கியது.
 
இந்த கோர விபத்தில் ஆட்டோவிலிருந்த 4 பேரும், சாலையோரம் நின்றுகொண்டிருந்த கல்லூரி மாணவிகள் 2பேர் மற்றும் ஒருவர் என 7 பேர் சம்பவ இடத்திலே பலியாகியுள்ளனர். மேலும் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
 
விபத்தை ஏற்படுத்திய சொகுசு கார் ஓட்டுனரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போலீஸார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கோவை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :