செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (11:23 IST)

800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர் - உக்ரைன் அமைச்சகம் போர் அப்டேட்!

உக்ரைன் - ரஷ்யா மத்தியில் நடக்கும் போரில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
உக்ரைன் இன்று இரண்டாவது நாளாக ரஷ்யாவின் ராணுவ தாக்குதலுக்கு உள்ளானது. இந்நிலையில், செர்னோபிள் அணு விபத்துத் தளத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியதாக, யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாலையில் மத்திய கீவில் இரு பெரிய குண்டு வெடிப்புகளும் நிடத்தப்பட்டுள்ளது. 
 
எனவே உக்ரைன் நடத்திய பாதுகாப்பு தாக்குதலில் 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய ராணுவத்தின் 30 போர் டாங்குகள் அழிக்கப்பட்டதாகவும், ரஷ்ய விமானப்படையின் 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.