வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 1 ஜூன் 2021 (13:32 IST)

ரஷ்யாவிலிருந்து புறப்பட்டது 56.6 டன் ஸ்புட்னிக் தடுப்பூசிகள்! – இந்தியா வருகிறது!

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில் ரஷ்யாவிலிருந்து ஸ்புட்னிக் தடுப்பூசிகள் இந்தியாவிற்கு புறப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் அவசர கால அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கும் இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை எழுந்துள்ள நிலையில் இன்று ரஷ்யாவிலிருந்து 56.6 டன் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் சிறப்பு விமானம் மூலம் இந்தியா புறப்பட்டுள்ளது. இந்தியா வந்ததும் விரைவில் தடுப்பூசி விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.